மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 27, 2024

  • மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல்

    என்.குணசேகரன் மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர். 1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக்  கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார். 2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராளமயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துடன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார். பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உடையாடல் “மார்க்ஸ் – புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. அரசியல் கையேடு மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உதவிடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தோழர் விஜய் பிரசாத் உலக அளவில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டாளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போராடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக்களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார். அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளிவரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டுரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும்போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாடலோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை. நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொருளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில்,மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிகழ்வைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவரது புரட்சிகர அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் மார்க்சின் எழுத்துக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசியலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முதலாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறியுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று… Continue reading