மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 29, 2024

  • நாடாளுமன்றம் என்ற களத்தில்..

    டி. கே. ரங்கராஜன் (தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ‘தொடர் ஓட்டம்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்) நிதித்துறைக்கான குழுவும் பணமதிப்பு நீக்கமும் இந்தக் குழுவில் இருக்கும்போது பணமதிப்பு நீக்கம் பற்றிய பிரச்சனை வந்தது. இது பற்றி விவரங்களை அறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்திகாந்த தாஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியாளர்கள் சங்க (Bankers Association) நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தோம். எவரும் இது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றோ தங்களுடன் விவாதிக்கப்பட்டதாகவோ கூறவில்லை. அமைச்சர்கள் கூட தேநீர் விருந்துக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கே தான் பிரதமர் டிவியில் பேசப் போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குழுவில் உர்ஜித் படேலிடம் கேள்விகள் கேட்டபோது அவரைப் பேசவிடாமல் மன்மோகன் சிங் தடுத்ததோடு, கூட்டத்தையும் முடிக்கச் சொல்லிவிட்டார். குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியும் அப்படியே செய்துவிட்டார். இதுதான் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கப் போக்கு என்பது. பாதுகாப்புத்துறை நாடாளுமன்றக்குழு அனுபவங்கள் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை 200 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திடம்தான் இருந்தது. இதற்கொரு காரணம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். பிரிட்டனில் இது தனியாரிடம் இருந்தது என்பதை கவனித்தால் இது புரியும். நாடு விடுதலை அடைந்தபின் பாதுகாப்புத் துறைக்கான தொழிற்சாலைகளில் 80 சதவீதம் அரசாங்கத்திடம்தான் இருந்தது. இப்போது இதில் தனியாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடும் வரலாம் என்று மோடி அரசு கூறிவிட்டது. டாடா நுழைந்துவிட்டது, ரிலையன்ஸ் வந்துவிட்டது, மஹிந்திரா புகுந்திருக்கிறது, கல்யாண் குழுமம் நுழைந்திருக்கிறது, எல் அண்ட் டி வந்துவிட்டது – இவர்கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். இப்படிப்பட்ட நடவடிக்கை ஆசியா கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆயுதப் போட்டியை உருவாக்கும். இது அத்துடன் நிற்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி வரும்; இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் போட்டி வரும். பாதுகாப்புத்துறையில் தனியார் மயம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. ஆனால் அதனை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பிஜேபி ஆட்சி முழுபலத்துடன் இருப்பதால் எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக செயல்படுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால் ஆயுதங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். அதாவது சமாதான சக வாழ்வு என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது பொருள். ஆயுதங்களின் அதிகப்படியான உற்பத்தி என்பது சந்தையைத் தேடுவதாக – அவற்றுக்கான தளங்களை அமைப்பதாக – மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வலியுறுத்தியும் வருகிறோம். ஒழுங்கைக் குலைப்பதும் நியாயம்தான் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமை தோழர் அனந்தன் நம்பியாருக்கு உண்டு. நம்பியார் நடந்து கொண்ட விதத்தை எஸ்.ஏ.டாங்கே கண்டித்தார். ஆனால் சுந்தரய்யா வரவேற்றார். ஒரே கட்சிதான் என்றாலும் நாடாளுமன்ற அமைப்பைப் பற்றிய இருவித அணுகுமுறை இருந்துள்ளது.… Continue reading