மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 31, 2024

  • அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை

    ஜி. ராமகிருஷ்ணன் கடந்த 29.02.2024 அன்று அதிகாலையில் காசா நகரத்தில் வீடுகளை இழந்த, வருவாயை இழந்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலம் ஒரு ட்ரக்கில் வந்திருக்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பொட்டலங்களை வாங்கிட அங்கு செல்கிறார்கள். திடிரென்று இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 112 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காசா – பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலின் தொடர்ச்சிதான் கடந்த 29 ஆம் தேதி நடந்த கோரமான சம்பவம். இத்தகைய சூழலிலும் ஐ.நா.மன்றத்தில் காசா மீது தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டது. இத்தகைய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வருகிறபோது இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை. மாறாக, அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கக் கூடிய நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. கூட்டுசேராக் கொள்கையிலிருந்து விலகல் தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் நிறவெறிக்கு எதிராக போராடுகிறபோது, பெரும்பான்மையான உலக நாடுகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஐ.நா. மன்றமும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டுமென்று தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்திய அரசு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக நின்றது. ஐ.நா. மன்றத்திலும் இனவெறிக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்தது. 1950களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்து வியட்நாமின் தென்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் ஆதரித்தன. ஐ.நா. மன்றமும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசு வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சமரசமின்றி ஆதரித்தது. கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து  கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது.  “ஒரு அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது இறுதியாக பார்த்தால் அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது. ஒன்றிய பாஜக அரசு பெருமுதலாளிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவும் செயல்படக்கூடிய அரசாக உள்ளது. பாஜக கட்சி இதர முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளை போல் அல்ல. இக்கட்சியின் தலைமையிலான அரசு பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அரசு. நாட்டின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், பாஜகவுக்கு வழிகாட்டுதல் நாக்பூரிலிருந்தே (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் – இந்துத்துவா சக்திகளின் கூட்டுக் களவாணி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடைய நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றக் கூடிய பாதையில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டிலிருந்து  அமலாக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்,… Continue reading