மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நிதி மூலதனத்தின் மேலாண்மை(2)


 

இது முதல் எனப்படும் பணத்தை நிதி வடி வத்தில் உருமாற்றி செய்யப்படும் உலகமயமாக்க லாகும். இந்தப் போக்குகளில் தொழில்களின் உலகமயமாக்கலை விட, தொழில்நுட்பத்தின் உலகமயமாக்கலைவிட, அறிவியலின் உலகமய மாக்கலைவிட, உற்பத்தியின் உலகமயமாக்கலை விட, புதுவகையான நிதியின் உலகமயமாக் கலையே நாம் காண முடிகிறது. கடந்த காலங் களில்  நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுகளைச் சார்ந்த நிதிகளாகும். பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த முதல், ஃப்ரான்ஸ் நாட்டைச் சார்ந்த முதல், அமெரிக்க நாட்டைச் சார்ந்த முதல் என்பவையே நமக்குப்பரிச்சயமானவை. இவற் றிற்கு மாறாக 1970களின் பின்பகுதியில் உருப் பெற்றதுதான் பன்னாட்டு நிதி மூலதனம். பல் வேறு நாட்டைச் சார்ந்த பணக்காரர்களும், பெரும் நிறுவனங்களும் வேற்று  நாடுகளின் நிதி சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். உலக நிதி மூலதனம் இன்று பன்னாட்டு குணாம் சம் கொண்டதாகவே உள்ளது. ஏகாதிபத்தியம் என்ற நூலில் லெனின், 1870க்கும் முதல் உலகப் போர் தோன்றிய 1914க்கும் இடைப்பட்ட காலத் தில் உலகப் பொருளாதாரத்தில்  நிதி மூல தனத்தின் தோற்றம் குறித்து விரிவாகவே கூறியுள் ளார். புதுமை என்னவெனில்1980லிருந்து நாம் காண்பது அதிவேகமாக இடம் விட்டு இடம் நகரும், ஓரிடத்திலும் கால் பாவாத தன்மை கொண்ட பன்னாட்டு நிதி மூலதனம் ஆகும். தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளின் காரணமாக, குறிப்பாக தகவல் தொழில்நுட்பங் களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளின் காரணமாக இத்தகைய ஓடுகாலித்தன்மை பன்னாட்டு நிதியங் களுக்கு சாத்தியமாகியுள்ளது. செல்வம் வைத் துள்ள பல பேர், உலக நிதி மூலதனத்தின் ஏதே னும் ஒரு பங்கிற்குச் சொந்தக்காரர்களாக இருந்த போதிலும், உண்மையில் உலக மூலதனத்தின் மீதுள்ள உரிமையும்  கட்டுப்பாடும், மையப்படுத் தப்பட்டும், தீவிரமாக ஒரே இடத்தில் குவிந்தும் உள்ளது.

நாணய, பங்கு, பணச் சந்தைகளில் விளை யாடும் ஊக வணிகர்களின் உருவகமாக செயல் படும் அதிகாரங்கள்  மையப்படுத்தப்பட்ட, நவீன உலக நிதி மூலதனம் உண்மையில் என்ன செய் கிறது? அது மிகக் குறைந்த கால கெடுவுக்குள் மிக அதிக லாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. கம்ப்யூட் டரின் மவுசை ஒரு க்ளிக் செய்வதன் மூலம் கோடிக்கணக்காண டாலர்களை உலகின் நிதிச் சந்தைகளின் ஊடே எடுத்துச் சென்று வியா பாரம் செய்கின்றது. ஏதேனும் ஒரு நிதிச் சந்தை உலகில் எந்த மூலையிலவது இயங்கிக் கொண்டே இருப்பதால் 24 மணி நேரமும் இந்த வியாபாரம் சாத்தியமாகியுள்ளது.

எனவே, நிதி மூலதனம் நீண்ட கால முதலீடு களில் அக்கறை காட்டுவதில்லை. புதிய உற்பத்தி மையங்களை நிறுவுவது, உற்பத்தியில் ஈடுபடு வது, உற்பத்தியான பொருட்களுக்கான சந்தை களைக் கண்டறிவது, தொழிற்சாலைகளை நடத்துவது போன்றவற்றில் சிறிதும் அதற்கு நாட்டம் இல்லை. அது ஊக நடவடிக்கைகளின் மூலமாக நாணய, பங்கு, மற்றும் நிதிச் சந்தை களில் அதிவேகமாக பணம் சம்பாதிப்பதையே விரும்புகிறது. ஆகவே இந்த ஊக விளையாட் டிற்கு ஏதுவான சீரான சட்டங்களை உலகெங்கும் உருவாக்க முயற்சிக்கிறது. இச்சட்டங்களின்  அடிப்படையில் நிதி மூலதனம் எந்தச் சந்தை யிலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், நுழைந்து லாபம் சம்பா தித்து இஷ்டம் போல் வெளியேற முயற்சிக்கிறது. தனது இந்த செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் எந்த நாட்டு அரசும் மிகக் குறைந்த கட்டுப் பாடுகளையே தங்கள் மீது விதிக்க வேண்டும் என்று நிதி மூலதனம் எதிர்பார்க்கின்றது  சிக்க லான உற்பத்தி முறையில் ஈடுபடாமலும், உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் விற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடாமலும், வெறும் பணம் மூலமாக மேலும் பணத்தை சம்பாதிப்பது எப்படி? இதற்கு நமக்குத் தெரிந்த பழைய வழிமுறை வட்டிக்கு விடுவதாகும். இரண் டாவது, பங்குச் சந்தையில் பணத்தை போடுவது. மூன்றாவது, நாணயச் சந்தையில் முதலீடு செய் வது; அதாவது அமெரிக்க டாலர், ஜெர்மன் மார்க், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற நாணயங் களை வாங்கி விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது. கடைசியாக அரசு பங்கு பத்திரங் களில் முதலீடு செய்வது. அரசு மக்கள் மீது வரி விதித்து பணத்தை வட்டியுடன் திருப்பித் தரும்!.

ஆகவே 1980களில் இருந்தே, உலக நிதி மூல தனத்தின் முக்கிய கோரிக்கை நிதித்துறை மீதான கட்டுப்பாடுகளை  நீக்க வேண்டும் என்பதுதான். அமெரிக்க நாட்டில் மட்டுமல்ல. அனைத்து நாடு களிலும் இது நடக்கவேண்டும் என்றே விரும் பின. இவ்வாறு அனைத்து நாடுகளிலும் நிதிச் சந்தைகளைத் திறந்து விடும் முயற்சிகளில் உலக நிதி மூலதனங்கள் வெற்றி பெற்றுள்ளன.

நாம் உலகில்1980 களில் ஏற்பட்ட பெரும் மாற் றங்களை கவனிக்க வேண்டும். முன்னரே கூறிய படி 1945 லிருந்து உலக அளவில் ஜனநாயகம் வேரூன்றி வளர்ந்து வந்தது. இதனால் 1974ல் ஐக்கிய நாடுகள் சபையின் 37வது பொது அவைக் கூட்டத்தில் வளரும் நாடுகளும், சோஷலிச நாடு களும் கூட்டாக ஒரு முக்கியமான திர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்தத் தீர்மானம் ஒரு புதிய பொருளாதார அமைப்பிற்கான அறை கூவல் விடுத்தது. காலனி ஆதிக்க ஆட்சியில் அடித்த கொள்ளைகளுக்கும், சுரண்டலுக்கும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் இழப் பீடு கொடுக்கவேன்டுமென்று அத்தீர்மானம் கோரியது. ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு பன்னாட்டு பொருளாதார அமைப்புக்கான கோரிக்கையை இத்தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் பன்னிரெண்டு வருடங்களுக்குள் 1986 ல் உருகுவே நாட்டில் நடந்த காட் ஒப்பந்த நாடு களின்  உருகுவே வட்ட பேச்சு வார்த்தை என்று அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவான சட்ட திட்டங்கள் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு அமைவதற்கான நடவடிக்கைகளை மேலை நாடுகள் வலியுறுத்தின. 1974ல் ஏழை நாடுகளிலிருந்து கோரிக்கைகள் எழுப்ப்ப்பட் டது: ஆனால் 1986இல் பணக்கார நாடுகளின் கோரிக்கைகளே எழுப்பப்பட்டன. வளர்ந்த பணக்கார நாடுகள், வளரும் நாடுகளிடம் கூறியது இதுதான்:

உங்கள் பொருளாதாரத்தை எங்களுக்குத் திறந்து விடுங்கள். எங்கள் நிதி மூலதனமும் சந்தைப் பொருட்களும் உங்கள் பொருளா தாரத்தில் வந்து குவியட்டும். இறக்குமதித் தீர்வை களை குறையுங்கள். இறக்குமதிக்கான தடைகளை நீக்குங்கள். உங்கள் பங்குச் சந்தைகளையும் நிதிச் சந்தைகளையும் திறந்து விடுங்கள்.எங்கள் உற் பத்திப் பொருட்களுக்கு சாதகமாக உங்கள் காப் புரிமைச் சட்டங்களைத் திருத்தி அமையுங்கள். விவசாய அரங்கையும் திறந்து விடுங்கள்.உங்கள் பொருளாதாரத்தில் நுழைந்து நாங்கள் வணிகம் செய்யும் வகையில் அனைத்து கட்டுப்பாடு களையும் நீக்குங்கள் இவையே அவர்களின் கோரிக்கைகள். ஆகவே 1970களின் நடுப்பகு திக்கும், 1980களின் நடுப்பகுதிக்கும், இடையே  உலக நிதி மூலதனத்தின் வளர்ந்து வந்த ஆதிக் கத்தின் காரணமாக உலகத்தின் தோற்றமே முற்றி லும் மாறியது.

1970களின் பின் பகுதியில் ஏற்பட்ட நெருக் கடிகள் காரணமாக, முதலாளித்துவ ஆளும் வர்க் கங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகளை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டன. அனைத்து நாடுகளிலும் நிதிச் சந்தையை திறந்து விடுவதில் தீவிரம் காட்டின. ஐஎம்எஃப், உலக வங்கி, இறுதியாக உலக வர்த்தக நிறுவனம் போன்றவற்றின் துணையுடன் மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமான விதிகளை புகுத்தின. இந்தப்புதியசூழ் நிலையில்தான்நிதித்துறை உலக மயமாக்கல்நடைபெற்றது.

ஏற்கனவே கூறியபடி பொருளாதாரத்தில் அர சாங்கமே அதிக அளவில் செலவினங்களை மேற் கொண்டு, வேலையின்மை விகிதத்தை குறைத்து, கிராக்கியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவும்   கீய்ன்ஸின் பொருளா தாரக் கொள்கை, 1970ல் தோன்றிய தேக்கவீக்கம் காரணமாக செல்வாக்கு இழந்தது. மாறாக, நவீன தாராளமயக் கொள்கை மேலோங்கியது. இக் கொள்கை நிதி மூலதனங்களின் நலன்களைக் பாதுகாப்பவதாகவே இருந்தது.அரசாங்கக் கொள்கைகளுக்கும், பொருளாதாரத்தில் உரு வாகும் வேலை வாய்ப்புகளுக்கும் எந்த சம் பந்தமும் இல்லை என்று இக்கொள்கை வாதிட் டது. நீண்ட கால அடிப்படையில், வேலை யின்மையின் விகிதம் எந்தக் காரணிகளையும் சாராமல் ஒரே அளவில்தான் இருக்கும் என்றும், அரசாங்கத் தலையிடுகளின் மூலம் கிராக்கியை அதிகப்படுத்தி செயற்கையாக இந்த விகிதத்தை குறைக்க முயற்சி செய்வது பணவீக்கத்துக்கே இட்டுச் செல்லும் என்ற கருத்தை  நவீன தாராள வாதம் முன் வைத்தது. இதுதான் நவீன தாராள வாத யுகத்தின் ஆரம்பமாகும். இது ஒரு பெரும் மாற்றமாகும். ஏனெனில், 1971ல் தான் அமெரிக்க அதிபர் நிக்ஸன் கீய்ன்ஸ் கொள்கையைத் தூக்கிப் பிடித்து நாம்அனைவரும் கீய்ன்ஸ் வாதிகள் என்று முழக்கமிட்டார். ஆனால் நிலைமை மாறி 70களின் பிற்பகுதியில் நவீன தாராளவாதம் உதயமாகியது. நவீன தாராளமயம் தீர்வல்ல நவீன தாராளமயம் என்பது முதலாளித்துவத் தின் அடிப்படை பிரச்சினையை, பொருளா தாரம் முதலாளித்துவ அமைப்பாக செயல்படும் போது  ஏற்படும் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதற்கு முதலாளித்துவம்  ஒரு பொருளாதார அமைப்பாக இயங்கும் போது அதன் தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தின் சாராம்சம் என்ன?

முதலாளித்துவத்தில் இரண்டு முரனண்பட்ட சக்திகள் இயங்குகின்றன. ஒன்று முதலாளி களிடையே இருக்கும் போட்டி. இரண்டாவது மூலதனத்திற்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்கள்.

முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டி யால் உந்தப்பட்டு, முதலாளிகள் புதிய புதிய உற் பத்தி முறைகளை உருவாக்கி, தொழில்நுட் பங்களை மேம்படுத்தி, இயந்திரமாக்கல், தானி யங்கி இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து ஒரு தனிப் பட்ட பொருளின் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும்.சந்தையில் பொருட்களை போட்டி யாளர்களை விட குறைந்த விலைக்கு விற்று போட்டியாளர்களை முறியடித்து சந்தையைக் கைப்பற்ற முடியும். இது முதலாளித்துவத்தின் ஒரு பகுதி.

மற்றொரு பகுதி இதை விட முக்கியமானது. அது முதலுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் வர்க்கப் போராட்டமே. இது மிக மிக அடிப்படையானது. இந்த அடிப்படை அம்சம் என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.

முதலாளிகளைப் பொறுத்த வரை தொழி லாளி லாபம் ஈட்ட உதவும் ஊற்றுக்கண் ஆகும். ஆனால் அதே சமயம் தொழிலாளர்க்கு சுயபுத்தி உண்டு. கோரிக்கைகளை முன்வைத்து போராடு வர், வேலை நிறுத்தம் கூட செய்வர். ஆனால் இயந்திரங்கள் வேலைநிறுத்தம் செய்யாது. கோரிக்கைகள் கொடுத்து வாதிடாது. எனவே இயந்திரமயமாக்கலையும் தானியங்கிமயத் தையும் புகுத்தி, தொழிலாளர்களை வெளியேற்ற  முதலாளிகள் தொடர்ந்து முயற்சி செய்வர்.

மேலும், தொழிலாளர்களின் செயல் திற னைச் சார்ந்து நிற்பதன் காரணமாக வேகமாக மாறும் சந்தைத் தேவைகளுக்கேற்ப உற்பத்தி அளவுகளை தகவமைத்துக் கொள்ள முடியாது. நினைத்த மாத்திரத்தில் உற்பத்தி அளவுகளை அதிகரிக்க முடியாது. தொழிலாளர்களின் திறன் சார்ந்து உற்பத்தி முறைகள் இருந்தால், அவர் களின் கூட்டுபேர சக்தி மிக அதிகமாக இருக்கும். ஆகவே எப்பொழுதும் ஆட்குறைப்பு செய்யவே முதலாளிகள் விரும்புகின்றனர். ஆகவே முத லாளி-முதலாளி போட்டிகளும், முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் தொழி லாளிகளை வெளியேற்றி தொடர்ச்சியான இயந்திரமயமாக்கல் நிகழ்வதற்கு  முதலாளித் துவம் வழிசெய்கிறது.  முதலாளித்துவம் தொழி லாளர்களின் செயல் திறனை தொடர்ந்து  மழுங் கடித்து அவர்களை தேவையற்றவர்களாக மாற்று கிறது. திறன் சாரா தொழிலாளர்களை சமூகத் தில் அது உருவாக்குகின்றது. முதலாளித்துவத் துக்கு முற்பட்ட காலத்தில் நாம் கைவினஞர் களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; திறன் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திறன் சாரா தொழிலாளர்கள் என்ற கூட்டம் பெருமளவில் இருந்த்தில்லை. இந்த திறன் சாரா தொழிலாளர் கள் என்ற கூட்டம் முதலாளித்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். முதலாளிக்கு, தொழிலாளி என்பவர் உபரி மதிப்பையும் அதன் மூலம் லாபத்தையும் ஈட்டுவதற்குத் தேவைப் படுகிறார். ஆனால் அதே சமயம் முதலாளி தொழிலாளியை உற்பத்திச் செலவில் ஓர் அங்க மாகவே பார்க்கிறார். ஆகவே தொழிலாளியை வெளியேற்று-இயந்திரமயமாக்கு- தானியங்கிமய மாக்கு  என்பது முதலாளிகளின் பல்லவியாக ஒலிக்கின்றது. இவ்வாறு இயந்திர மயமாக்கலும், உற்பத்திப் போக்கின் ஒவ்வொரு அம்சத்திலும் புகுத்தப்படும் தொழில்நுட்பத்தின் முன்னேற் றமும் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை அதி கரிக்கின்றன. சமூகத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி சக்தியும் மிக விரைவாக அதிகரிக்கின்றது.. தொழில்நுட்பங்களில் தொடர்ந்து வளர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேஇருக்கின்றன.

ஆகவே முதலாளித்துவத்தில், முதலாளி-முதலாளி போட்டியும், முதலாளி-தொழிலாளி வர்க்கப் போராட்டமும்  சமூக உற்பத்திச் சக்தி களின் அதிவேக வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைகின்றன. ஆனால், அதே சமயம், மறுபக்க மாக, முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி உறவு கள் சமூகத்தின் மொத்த வாங்கும் சக்தியை அதே வேகத்தில் உயர்த்த அனுமதிப்பதில்லை. முத லாளிகள் கூலிகளை கட்டுப்படுத்துவதற்கும், இச் சைப்படி தொழிலாளர்களை வேலையை விட்டு  நீக்குவதற்கும் விரும்புகின்றனர். முதலாளித் துவத்தில் பொதுமக்களின் வாங்கும் சக்தி மிக மந்தமாகவே வளர்கிறது. ஆகவே மிக வேகமாக வளரும் உற்பத்தி சக்திக்கும் (பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி வேகமாக அதிகரிக்கிறது)  மிக மந்தமாக வளரும் மக்களின் வாங்கும் சக் திக்கும் இடையேயான முரண்பாடு முதலாளித்வ அமைப்பில் எப்பொழுதும் கனன்று கொனே உள்ளது. இதனால் சமூகத்தின் பொருள் உற்பத்தி சக்திக்கும், நுகர்வு சக்திக்கும் இடையே சமநிலை ஏற்படுத்த இயலாமல், முதலாளித்துவ அமைப்பு, அவ்வப்போது நெருக்கடியில் தள்ளப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் நெருக்கடிகள் முதலாளித் துவத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாகும். அர சாங்கம் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் நெருக்கடிகள் என்பது தவிர்க்கமுடியாதவை. மேலும் திட்டமிடாத அமைப்பாக இருப்ப தாலும் நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் வெடிக் கும் அமைப்பாக முதலாளித்துவம் உள்ளது. முதலாளித்வ அமைப்பில் நெருக்கடிகள் உரு வாவதற்கு அவ்வப்பொழுது லாப விகிதம் குறை வது உட்பட வேறு பல காரணங்களும் உண்டு. ஆனால் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டுக் கொண் டிருப்பதனாலேயே முதலாளித்துவம் சீர் குலைந்து அழிந்து போய் விடாது. அறிவியல் பூர்வமான, நியாயமான  சமுதாயத்தைக் காண விழைபவர்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மானுடம்முன்னேறிச் செல்ல உழைக்க வேண்டும். முதலாளித்துவ அரசுகள் என்ன முயற்சி செய்தாலும் முத லாளித்துவ அமைப்பு அவ்வப்போது நெருக் கடியில் சிக்கித் தவிக்கும் என்பதுதான் உண்மை. எனவே, விரிவாக்கம், மந்தம், தொய்வு, மீட்சி, மறுபடியும் விரிவாக்கம்,என்ற வகையில் பொரு ளாதார சுழற்சிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத அம்சங்களாகவும், பண்புக ளாகவும் உள்ளன. பொருளாதார அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் இயல் பாகவே இது அமைந்துள்ளது. மார்க்ஸ் மூலதன நூலில் இதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பின் குழப்பங்கள், உற் பத்தியான பொருட்களின் நுகர்வில் உள்ள தொய்வு, லாப விகிதங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகியவை குறித்து விரிவாகக் கூறியுள் ளார்.

–பாலு

(இன்னும் வரும்)Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: