கொல்கத்தா ப்ளீனம் அறிக்கையில் இருந்து ... 1
• கட்சி உறுப்பினர்களின் தரம் என்பது, ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. அரசியல், தத்துவார்த்த நிலைப்பாட்டையும், ஸ்தாபன ஒழுங்கிற்கு உட்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய பணித்திறனையும் தேவையான அளவில் இரண்டறக் கலந்து பெற்றிருக்கும் கட்சி உறுப்பினர்களால் மட்டுமே, மக்களிடம் உறுதியான பிடிமானம் கொண்ட, வலுவான, கம்யூனிஸ்ட் கட்சியை கட்டும் பொறுப்பினை நிறைவேற்றிட முடியும். அடிப்படை வர்க்கங்களில் இருந்தும், ஒடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும், மிகச் சிறப்பானவர்களை கட்சியில் உறுப்பினர்களாக உருவாக்கிட வேண்டும்.
• கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கணக்கில் கொள்ளாமல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பை மட்டும் கணக்கிட்டு, அதுதான் கட்சி விரிவாக்கம் என்று விளக்கிவிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் அரசியல், ஸ்தாபன உணர்வு மட்டத்தை உயர்த்துவதும், உறுப்பினர் தரத்தை உயர்த்துவதுமே முக்கியமான கடமையாகும். வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பதே கட்சி உறுப்பினர் சேர்ப்பிற்கு பிரதானத் தகுதியாய் இருக்க வேண்டும்.
• கட்சி உறுப்பினர் புதுப்பித்தல் கீழ்க்கண்ட கடமைகள் நிறைவேற்றப்படுவதன் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும்.
1. கட்சி உறுப்பினர் சந்தா மற்றும் லெவி செலுத்துதல்.
2. கட்சிக் கிளைக் கூட்டங்களில் தொடர்ச்சியான பங்கேற்பு.
3. கட்சி வகுப்புகள், அரசியல் பிரச்சாரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு.
4. கட்சியால் விலக்களிக்கப்பட்டால் அன்றி, வெகுமக்கள் அரங்கத்தில் உறுப்பினராகி அதன் வேலைகளில் செயலூக்கத்துடன் பங்கேற்பது.
5. கட்சியின் பத்திரிகைகளை தொடர்ச்சியாக வாசிப்பது; சந்தாதாரர் ஆவது.
கட்சி ஊழியர்கள்
• கட்சி ஊழியர்கள் என்பவர்கள் கட்சிக் கமிட்டிகளின் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வெகுமக்கள் அமைப்புகளில் பொறுப்பளிக்கப்பட்டு, குறிப்பிட்ட மட்டத்தில் கட்சியால் அனுப்பப்பட்டவர்கள். கட்சித் தலையீடு செய்கிற சில தளங்களில் குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர். இத்தகைய ஊழியர்களிலிருந்தே கட்சியின் முழுநேரப் பணிக்கான முழுநேர ஊழியர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்களின் முழுநேரத்தையும், சக்தியையும் கட்சியின் கூட்டுச் செயலாக்கத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள்.
• கட்சியின் எல்லா மட்டங்களுக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும், மாநில அரசாங்கம் – நாடாளுமன்றம் – மாநில சட்டமன்றங்கள் – உள்ளாட்சி அமைப்புகள் – கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கும் ஊழியர்கள் உரிய எண்ணிக்கையில் கட்சிக்கு தேவைப்படுகிறார்கள். பல்வேறு மட்டங்களிலும் பகுதிகளிலும் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர் பற்றாக்குறையைக் கட்சி சந்தித்து வருகிறது. பகுதி நேர ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தாலும், அவர்களைக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளின் பல்வேறு நடவடிக்கைகளை திறம்பட நிறைவேற்ற இயலாது. எனவே கட்சிக்கு உரிய எண்ணிக்கையில் முழுநேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இல்லாமல் இப்பணிகளைச் செய்ய இயலாது. கட்சிப் பணி என்பது நிலைத்ததாகவும், திட்டமிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பகுதி நேர ஊழியர்கள் மத்தியிலான வேலைப் பகிர்வு கண்காணிப்போடு அமைய வேண்டும் இவைகளை உறுதி செய்ய உரிய எண்ணிக்கையிலான முழுநேர ஊழியர்கள் கட்சிக்கு இருக்க வேண்டும். முழுநேர ஊழியர்களை தேர்வு செய்வதென்பது அந்த தோழரின் திறமைகள் பற்றிய தன்னுணர்வுக்கு இடம் தராத கூட்டு முடிவின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
• கட்சி ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களைத் தேர்வு செய்து, அவர்களிலிருந்து நூற்றுக்கணக்கான, திறமையான, வெகுமக்கள் தலைவர்கள் உருவாக பயிற்றுவிக்க வேண்டும். ஊழியர்களும், தலைவர்களும் மார்க்சிய – லெனினிய ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக, அரசியல் தொலைநோக்கு பார்வை உடையவர்களாக, வேலைகளில் அர்ப்பணிப்பும், தகுதியும் பெற்றவர்களாக, சுய தியாகத்திற்கான முழு உணர்வு கொண்டவர்களாக, தாங்களாகவே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக, இன்னல்களுக்கு மத்தியில் துணிச்சலாய் செயல்படுபவர்களாக, கட்சிக்கும் வர்க்கத்திற்கும் விசுவாசமும், பற்றுறுதியும் மிக்கவர்களாக இருப்பது அவசியம். இது கட்சி விரிவாக்கத்தை எட்டுவதற்கான முக்கியமான பணி. ஊழியர் தேர்வு, பயிற்சிக்கான காலவரையறைக்கு உட்பட்ட திட்டம் மாநிலங்களில் உருவாக்கப்பட வேண்டும். முழுநேர ஊழியர்களுக்கு பயிற்சி, மறுபயிற்சி அளிக்க வேண்டும்.
தொகுப்பாக:
• கட்சி உறுப்பினர் சேர்ப்பில் நெளிவுசுளிவான அணுகுமுறை கூடாது; துணைக்குழு செயல்பாட்டை உறுதிப்படுத்தல்; உறுப்பினர்களின் தரத்தை நிலை நிறுத்துதல்; செயல்பாடு அற்ற உறுப்பினர்களை நீக்கி, கட்சியினை தூய்மைப் படுத்துதல். கட்சி உறுப்பினர் புதுப்பித்தலில் மேற்கூறிய ஐந்து அளவுகோல்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
• வர்க்க உள்ளடக்கத்தில் மொத்த கட்சி உறுப்பினர்கள் மத்தியிலுள்ள அடிப்படை வர்க்க உள்ளடக்கத்திற்கும், மாநில – மாவட்டக்குழு உறுப்பினர்கள் மத்தியிலுள்ள உள்ளடக்கத்திற்குமான சமன்பாடின்மையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம், விவசாய தொழிலாளி மற்றும் ஏழை விவசாயி பிரிவினை சார்ந்தவர்களை மேல் கமிட்டிகளுக்கு உயர்த்த திட்டமிடுவதும், அதனை செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும்.
• இதுபோலவே, கட்சி உறுப்பினர்களின் சமூக உள்ளடக்கத்திற்கும், மாநில – மாவட்டக்குழுக்களின் உள்ளடக்கத்திறகும் இடையே உள்ள சமன்பாடின்மையும் சரிசெய்யப்பட வேண்டும். எங்கு அத்தகைய சமன்பாடின்மை நிலவுகிறதோ, அங்கு பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான திட்டமிடலோடு அந்த இடைவெளிகள் சரிசெய்யப்பட வேண்டும்.
• பெண் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அகில இந்திய அளவில் அதிகரிக்க 2016-2018க்கு இடையிலான மூன்றாண்டு காலத்தில் மொத்த உறுப்பினர்களில் 25 சதவிகிதம் என்கிற இலக்கோடு செயல்பட வேண்டும். முன்னணிப் பெண் ஊழியர்களை ஈர்ப்பதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கமிட்டிகளில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
• கட்சியில் இளைஞர்கள் உள்ளடக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இவர்களின் பங்கு 20 சதவிகிதத்திற்கு கீழ் உள்ள அம்மாநிலங்களில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இளைஞர்களின் பிரச்சனைகள், ஆதங்கங்களைக் குறிப்பாகத் தொடுகிற வகையில் கட்சியின் இயக்கங்களும், பிரச்சாரங்களும் அமைய வேண்டும்.
• மாணவர், இளைஞர் அமைப்புகளின் மீதும், அவற்றுக்குள் கட்சியைக் கட்டுகிற பணியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
• மாநிலங்களில் சிறப்பாக அமல்படுத்துவதற்கான ஊழியர் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அரசியல் ஸ்தாபன மட்டத்தின் அடிப்படையில், முறையான முழுநேர ஊழியர் தேர்வு, முழுநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், கால வரையறையுடன் கூடிய ஊழியர் தேர்வு, பயிற்றுவிப்பு ஆகியவற்றை அமல்படுத்திட வேண்டும். இளம் தோழர்களை பொறுப்புகளுக்கு உயர்த்தவும் தீவிர நடவடிக்கைகள் தேவை.
I am interested in communist politics and ready to learn to make myself prepare for the Indian communist.
LikeLike
We welcome you.
LikeLike
The party has rightly analyzed and guiding the party members and organs to establish a party which can play revolutionary role in implementing the party program. The message what has been published should reach all party members and sympathizers. The initiative of establishing marxistreader.app will be one of the useful tool to develop qualitative members.
LikeLike