மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஐந்து தேர்வுகள் – சூ-என்-லாய்


தொகுப்பு: பிரதிப்

தோழர்களே, சோசலிச கட்டுமானத்ததை நிறுவ உழைக்கின்ற, பாடுபடுகின்ற தோழர்கள் கவனத்திற்கு, தலைசிறந்த மார்க்சிய-லெனியவாதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவருமான தோழர் சூ-என்-லாய், ஐந்து அரங்குகளில் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியிருப்பத்தின் அவசியத்தைப் பற்றி பின்வருமாறு குறிபிடுகிறார்.

அவை:

  1. சிந்தாந்தம் ( philosophy )
  2. அரசியல் ( politics )
  3. சமுக உறவுகள் ( social relationship )
  4. குடும்ப உறவுகள் ( family relationship )
  5. அன்றாட வாழ்வு ( day today life )

முதலில் சித்தாந்த அரங்கில் நாம் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்

இதன் பொருள் நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்வதும், மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தின் வழியாக உலக வாழ்க்கையைப் பற்றிய தெளிவைப் பெறுவதே ஆகும். காலம் எப்போதும் முன்னோக்கிச் சென்று கொண்டிருகிறது என்பதை நாம் அறிவோம். அதுபோல நமது சிந்தனையையும் முன்னேற்றுவதே சித்தாந்த மறுவார்ப்பாகும். சித்தாந்த மறுவார்ப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் புரட்சிகர ஊக்கம் குறைய நேரிடும், தோழர்கள் கூட தங்கள் தகுதி படிநிலையில் (hierarchy) இருந்து பின்னுக்குத் தள்ளபடும் நிலையும் ஏற்படும்.

எல்லா வகையான சமுக உறவுகளும் இன்னும் பலவும் நம்மீது செல்வாக்கை செலுத்தி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கையுடன் நாம் உணர வேண்டும். எனவே நம்மை அடிக்கடி பரிசீலனை(self review) செய்து கொள்வதும், தோழர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். சித்தாந்த மறுவார்ப்பை உயிர் மூச்சாகக் கருத வேண்டும். வழக்கமான குளியலைப் போல சித்தாந்த குளியலையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு, அரசியல் அரங்கில் தேர்வை எழுதுவது

எந்தச் சூழ்நிலையிலும் நமது அரசியல் நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு புரட்சி அணியில் சேர்ந்துவிட்டதால் மட்டும் நாம் அரசியல் நிலைபாட்டில் உறுதியாக நிற்பதாக ஆகிவிடாது. அவற்றை உண்மையான போரட்டத்தில் உங்களின் செயல்பாடுகளின் வழியே அவற்றை மதிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக ஒரு போராட்டத்தில் நீங்கள் உறுதியாக இருந்திருப்பீர்கள். மற்றொன்றில் அவ்வாறு இருந்திருக்க மாட்டீர்கள். எனவே அரசியல் நிலைப்பாட்டின் உறுதித் தன்மையை நீண்ட போராட்டத்தின் ஊடாகத்தான் மதிப்பிட முடியும்.

ஒருவரது அரசியல் உறுதியை மதிப்பிட, வேலையைப் பற்றிய அவரது மனப்பான்மை(understanding of the work), கட்சியின் கொள்கைகளை புரிந்து கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதும்(understanding and implementing party policies), மக்களுடனான அவரது உறவு(relationship with masses), முக்கியமாக கட்சியைப் பற்றி அவர் கண்கூடாக வெளிபடுத்தும் விதம் ஆகியவற்றை வைத்தே நாம் பரிசிலிக்க வேண்டும். தவறுகளை திருத்தி கொள்வதற்கும் விமர்சனம்(criticism) – சுயவிமர்சனம்(self-criticism) ஆகியவற்றிற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். எனவே அரசியல் அரங்கில் எந்தச் சோதனை வந்தாலும் புரட்சிகர நிலைபாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

மூன்றாவது, பழைய சமுகத்தின் தீய தாக்கங்களை எதிர்த்து நிற்க வேண்டும்

நம்முடைய சமுக அமைப்பு என்பது மிகவும் சிக்கலானது. இன்றும் பழைய தீய தாக்கங்கள் நீடிக்கவே செய்கிறது. நமது சிந்தனையை மிக எளிதாக நச்சுப்படுத்தும் நிலபிரபுத்துவ(feudal) முதாளித்துவ(capitalist) பழக்கவழகங்களின் தாக்கங்கள் தொடர்ந்து நீடிக்கவே செய்கின்றன. உங்களுடைய விழிப்புணர்வை நீங்கள் தளர்த்தும்போது உங்கள் மனதை மாசுபடுத்தும் வாய்ப்பை தீய பழக்கவழக்கங்கள் பெற்றுவிடுகின்றன. இந்தச் சமுக அமைப்பை மாற்றி அமைப்பது என்பது குறிப்பாக நமக்கு தலைமை பொறுப்பில் உள்ள தோழர்களுக்கு மிகவும் கடினமான பணி என்பதை உணர வேண்டும்.

இந்த பழைய தீய தாக்கங்கள் ஒரே நாளில் மறைந்துவிடாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். சமுகத்தில் அனைத்து துறைகளிலும், அமைப்புகளிலும் எல்லாத் தரப்பினரிடமும் அது ஊடுருவிக்கிடக்கிறது. உண்மையில் இந்த தீய தாக்கங்களை மாற்ற முயற்சிக்கும்போது அது எதிர்வினையாக உங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு நீண்ட கால போராட்டமாகும். எனவே இந்த நீண்ட கால போராட்டத்திற்கு மன உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.

நான்காவது நம்முடைய உறவினர்களிடம்,

இது நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து உறவினர்களுக்கும் பொருந்தும். நீங்கள் அவர்களை மாற்றப் போகிறிர்களா? அல்லது அவர்கள் உங்களை மாற்றப் போகிறார்களா? தலைமைப் பொறுப்பில் உள்ள தோழர்கள் மட்டுமல்ல அனைத்துத் தோழர்களும் பதில் சொல்ல வேண்டிய முதற் கேள்வி இது.

தோழர்கள் சரியாக கையாள வேண்டிய விசயமும் கூட. இல்லையெனில் நீங்கள் அவர்களது கருத்துக்கு சாய்ந்தாட வேண்டிய நிலை ஏற்படுமே தவிர ஒருபோதும் அவர்களை மாற்ற முடியாது. இந்தப் பிரச்னையை கையாள சமுதாயத்தின் உதவியை சார்ந்திருப்பதே சிறந்த வழியாகும். அவர்கள் மக்கள் திரளில் சென்று மனப் பக்குவம் பெறவும் தங்களை மறுவார்ப்பு செய்யவும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இதைச் சொல்வது எளிது. ஆனால் செய்வது மிகவும் கடினமானது.

ஐந்தாவதாக, அன்றாட வாழ்வில்

நம்முடைய அன்றாட வாழ்க்கை என்பது சித்தாந்தம், பொருளாதாரம் ஆகிய இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நம்மை கம்யூனிச லட்சியத்துக்கு அற்பணித்துக் கொள்ளவதோடு, மக்கள் நலன் மீதும் எதிர்கால உலகின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு உறுதியான பொறுப்பு உணர்வையும் உயர்ந்த ஒழுக்க நெறிகளை வளர்க்க வேண்டும்.

இதன் பொருள் நாள்தோறும் அரசியல் போராட்டங்களிலும் வேலைகளிலும் மூழ்கிப் போக வேண்டும் என்பதல்ல. மனிதர்கள் என்ற முறையில் பல்சுவை மாற்றங்களும் பொழுதுபோக்குகளும் தேவையே. ஆனால் அவைகள் மக்களின் சிந்தனைகளை தூண்டுவதாகவும், ஒழுக்க நெறிகளை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். பிற்போக்குத் தனமான(regressive) இலக்கிய படைப்புகளை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். தோழர்கள் இவ்வைந்து அரங்குகளிலும் தேர்வை எழுதுவது என்பது எளிதானதல்ல. இருப்பினும் ஒவ்வொரு சோதனையும் எதிர்கொண்டு, உணர்வுப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இறுதியாக…

உண்மையை பேசுங்கள், மெய்யான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், ஊக்கத்தோடு பணியாற்றுங்கள், நடைமுறை விளைவுகளைச் சாதிக்க போராடுங்கள்…



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: