மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


June 2022

  • உக்ரைன் போர்: நாம் யார் பக்கம்?

    உக்ரைனில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலுமே அமைதி நிலவவேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்புவதாக இருந்தால், இன்றைக்கு உலகின் அனைத்து போர்களுக்கும் மையக்காரணமாக இருக்கும் நேட்டோ படையினை முற்றிலுமாக ஒழிக்கப் போராட வேண்டும். Continue reading

  • பண வீக்கம்: தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு !

    பண வீக்கம்: தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு !

    பண வீக்கம் என்பதை எளிமையாக சொல்வதானால், வாங்குபவர்களிடம் இடம் இருந்து விற்பவர்களுக்கு வருமானம் செல்வதுதான். (விவசாய விளை பொருட்களுக்கு இந்த லாஜிக் பொருந்தாது).  30 மணி நேரத்தில் ஒரு பில்லியனர் உருவாவதும், அதே நேரத்தில் 1 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வீழ்வதும் இதனால் நிகழ்வதுதான்.  Continue reading

  • பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!

    பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!

    அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி ‘தாரளமயமாக்கல்’ என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. Continue reading

  • மக்கள் ஆளும்போது…

    மக்கள் ஆளும்போது…

    நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!  Continue reading

  • லத்தீன் அமெரிக்கா: இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் வெற்றி பெறுவது எப்படி?

    லத்தீன் அமெரிக்கா: இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் வெற்றி பெறுவது எப்படி?

    இந்த அரசாங்கங்கள் ஒரு சோசலிச மாற்றை அமைக்கவில்லை என்றாலும், அவை ‘அகநிலை காரணி’யை வளர்ப்பதற்கான போராட்டத்தில் சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் நவ-தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான சவாலை எழுப்ப முடியும். இந்த அரசுகளின் வெற்றியானது ‘அரசியலுக்குக் கட்டளையிடுவதற்கு’ அவர்கள் எவ்வாறு உறுதியுடன் செயற்படுகிறார்கள் என்பதையும், ‘அரசியலே அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறது’ என்பதை உறுதி செய்வதிலும் அடங்கியுள்ளது Continue reading